இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். புனித்தின் திடீர் மரணம் தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. நல்ல உடல் நலத்துடனும், உடற்கட்டுடனும் இருந்த புனித்தின் மரணம் மருத்துவ உலகையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமூக ஊடங்களும் இதுகுறித்து விவாதங்களை நடத்தி வருகிறது.
புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை தாமதிக்கப்பட்டதாகவும், உடனடி சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், புனித்தை முதலில் பரிசோதித்த அவருடைய குடும்ப மருத்துவர் ரமணா ராவுக்கு ரசிகர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.