சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு |

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.  
சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்சைடர் பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.  டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர்.  எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி பெயர் வைத்ததாகத் தெரிவித்தார். 
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தை டாப்சியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.