இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடித்து வரும் வெப் என்கிற படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார். காளி, மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.
எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, முந்திரி காடு. கண்ணை நம்பாதே படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற நாயகிகளாக நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரே கட்டமாக வேகமாக நடந்து வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தை வேகமாக முடித்து பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.