நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? |
கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை கடைசிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர்களில் முக்கியமான இருவர் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ். ஆரம்பத்தில் இருந்தே தன்னுடன் ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு, ஆரி மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்த பாலாஜி, அந்த சீசன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுவிட்டார். இறுதியில் பிக்பாஸ் ரன்னர் ஆக இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
அந்த சீசன் முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் பாலாஜி முருகதாஸ். இந்தப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் பாலாஜி முருகதாஸின் செயல்கள் குறித்து தினசரி யூ டியூப்பில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து கமென்ட் செய்து வந்தவரும் இதே ரவீந்திர் சந்திரசேகரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.