தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது |

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம் ‛எம்.ஜி.ஆர். மகன்'. நாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா, சமுத்திரகனி, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து கதைக்களத்தில் அப்பா - மகன் இடையே நடக்கும் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இப்படம் ரிலீஸிற்கு தயாராகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கொரோனா பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இப்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும் படத்தை ஒடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அதன்படி வருகிற தீபாவளி தினமான நவ., 4 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, ‛‛உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா, உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா!'' என்ற கேப்ஷனை கொடுத்துள்ளனர்.
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, விஷால்-ஆர்யாவின் எனிமி படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் படம் ஓடிடி தளத்திலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.