ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு', விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', அருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து தற்போது 'மாநாடு' படம் விலகும் எனத் தெரிகிறது. 'அண்ணாத்த' படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், 'மாநாடு, எனிமி' ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200 தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.
எனவே, 'அண்ணாத்த' படத்துடன் போட்டி போடாமல் வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மாநாடு' படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
'எனிமி' படமும் போட்டியில் இருக்குமா அல்லது கிடைத்த தியேட்டர்களே போதும் என படத்தை வெளியிடுவார்களா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.