‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக அதேசமயம் யோகிபாபுவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை விலா நோக சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இந்தப்படத்தின் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரால் அவரது முந்தைய படமான கோலமாவு கோகிலாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
அதை தொடர்ந்து ஜாக்பாட், நெற்றிக்கண் தற்போது டாக்டர் ஆகிய படங்களில் தனது பங்களிப்பை சரியாக செய்துள்ள ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, தான் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளதை உறுதி செய்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி. அதோடு அடுத்தப்படியாக வடிவேலு நடிக்க நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.