அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் இன்று அவருடைய 31வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அக்ஷராவின் பிறந்தநாளை அவருடைய அக்கா ஸ்ருதிஹாசன், அப்பா கமல்ஹாசன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.
அது பற்றிய புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்ஷரா. நீ, நீ, நீ என்னுடைய டார்லிங். எங்களுக்காக நீ சேர்த்து வைத்திருக்கும் எல்லாவற்றிற்கும் நான் உற்சாகமாக இருக்கிறேன். உன்னுடைய அக்காவாக நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேக் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நன்றி அக்கா” என அக்ஷரா நன்றி தெரிவித்துள்ளார். அக்ஷரா தற்போது நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.