‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி-மஞ்சு வாரியர் முதன்முதலாக இணைந்து நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் வெளியானது. மஞ்சு வாரியார் சினிமாவில் நுழைந்த இந்த 25 வருடங்களில் மம்முட்டியுடன் ஒரு படம் கூட நடித்ததில்லை, அவருக்கும் மம்முட்டிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்று சொல்லப்பட்ட வதந்திகளை இதன்மூலம் இருவருமே உடைத்தனர். அதுமட்டுமல்ல இப்போதும் தனது முன்னாள் கணவர் திலீப்பின் ஆதரவாளராகவே மம்முட்டி காணப்பட்டாலும், அதை மனதில் கொள்ளாமல் அவருடன் சகஜமாகவே பழகியுள்ளார் மஞ்சு வாரியார்.
இதுபற்றி எல்லாம் ஏற்கனவே சில பேட்டிகளில் கூறியுள்ள மஞ்சு வாரியர், அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தற்போது பகிர்ந்துள்ளார். ஆனால் “இந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்தது, சாட்சாத் மலையாள சினிமாவின் சிறந்த புகைப்பட கலைஞராகிய மம்முட்டி தான்.. இந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது பொக்கிஷம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.