அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து செய்திகள் அதிகம் அடிபட்டு வரும் நிலையில், விவாகரத்து பெற்று பிரிந்த ஒரு நட்சத்திர தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது என்பது ஆச்சரியமான செய்தி தான். மலையாளத்தில் பிரபல இயக்குனரான பிரியதர்ஷன் மற்றும் பிரபல நடிகையாக திகழ்ந்த லிசி இருவரும் காதலித்து 1990ல் திருமணம் செய்து கொண்டனர். 26 வருடங்கள் சுமூகமாக சென்ற இவர்கள் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ல் விவாகரத்து வரை சென்று இருவரும் சுமூகமாக பிரிந்தனர். இவர்களது மகள் கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
அதேசமயம் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றாலும் கூட ஒருவர் மீது ஒருவர் எந்த இடத்திலும் யாரையும் குறை கூறிக் கொண்டதில்லை. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது மகன் சித்தார்த்தின் திருமணம் நடைபெற்ற போது கூட இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அந்த திருமணத்தை நடத்தினர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில் மகன் திருமணத்திற்கு இருவரும் ஒன்றாக இணைந்து வந்து கலந்து கொண்டனர்.
அது மட்டுமல்ல, சமீபத்தில் சென்னையில் நடிகர் மம்முட்டி, தான் நடித்துள்ள பேட்ரியாட் படத்திற்கு நடிகை லிசிக்கு சொந்தமான டப்பிங் ஸ்டுடியோவில் தான் தனது பணிகளை மேற்கொண்டார். அப்போது லிசி மற்றும் பிரியதர்ஷன் இருவருடன் மம்முட்டி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை லிசியே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இருவரும் பிரிந்து வாழ்கிறார்களே, அப்படி இருக்கையில் மம்முட்டியுடன் லிசி மட்டும்தான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், அங்கே எப்படி பிரியதர்ஷன் வந்தார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்கிற தகவலை கேள்விப்பட்ட மம்முட்டி தான், டப்பிங் பேசும்போது ஸ்டூடியோவுக்கே இருவரையும் வரவழைத்து பேசி இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்ததற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பின்னர் தெரிய வந்துள்ளது. இவர்கள் தற்போது இணைந்து வாழ்ந்தாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையாம். இதற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கையை தொடர முடிவு எடுத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.