பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‛சர்வம் மாயா' படத்தின் மூலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை ருசித்த நடிகர் நிவின்பாலி நடிப்பில் அடுத்ததாக பிரதிச்சாயா என்கிற படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி நடித்த இரண்டு கதாபாத்திரங்களையும் ஏஐ முறையில் மோகன்லால் நிவின்பாலியாக மாற்றிய ரீல்ஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது பிரதிச்சாயா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிவின்பாலியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
ஏற்கனவே காயங்குளம் கொச்சுன்னி என்கிற ஒரு வரலாற்று பேண்டஸி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார் நிவின்பாலி. இந்த நிலையில் அந்த ரிலீஸ் வீடியோவை தானும் பார்த்ததாகவும் கடந்து சில வருடங்களாகவே மோகன்லாலும் தானும் இணைந்து அப்படி ஒரு பீல்குட் படத்தில் நடிப்பதற்காக கதையைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், நல்ல கதையும் இயக்குனரும் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக மெய்யழகன் போன்ற ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிப்போம் என்றும் நம்பிக்கையுடன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் நிவின்பாலி.