விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தங்க கடத்தல் பின்னணியில் வழக்கம் போல லோகேஷ் கனகராஜ் பாணியில் கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக வழக்கம் போல பாலிவுட் நடிகர் அமீர்கானிலிருந்து ஒவ்வொரு மொழியிலிருந்தும் இதுவரை தமிழ் சினிமாவிற்கு வந்திராத நடிகர்களாக பார்த்து அழைத்து நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த வகையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்ற மலையாள நடிகரும் இயக்குனருமான சவ்பின் சாஹிர் கூலி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக் கூறி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் அதில் சவ்பின் சாஹிருடன் இணைந்து பணியாற்றியது வசீகரிக்கும் ஒரு அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள சவ்பின் சாஹிரின் கெட்டப்பை பார்க்கும்போது அவர் ஒரு கிரமாத்து கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்றே தெரிகிறது.