சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
மலையாளத்தில் திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. திலீப்புடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்த தென்காசி பட்டணம் பட இயக்குனர் ரபி இயக்கி வருகிறார். கதாநாயகியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக சமீபத்தில்தான் நடிகர் ஜெகபதிபாபு இணைந்து, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் புது வரவாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இணைந்துள்ளார். திலீப்பும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மலையாளத்தில் பிரஜா, பிரணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அனுபம் கெர், இதற்கு முன்னதாக கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் மலையாளத்தில் பிளஸ்சி இயக்கத்தில் வெளியான களிமண்ணு என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது