பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
மலையாள திரையுலகில் பிரபல ஆக்சன் பட இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜை வைத்து காப்பா என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ்.
இந்த நிலையில் கடுவா படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ கார் ஒன்றை ஷாஜி கைலாஷ் வாங்கி உள்ளார் என்கிற தகவல் வெளியானது. கார் நிறுவனத்திடம் இருந்து ஷாஜி கைலாஷ் சாவியை பெற்றுக் கொள்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அதை உறுதி செய்தன. ஆனால் அந்தக் கார் என்னுடையது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார் ஷாஜி கைலாஷ்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது நான் பிரித்விராஜை வைத்து இயக்கிவரும் காப்பா படத்தின் தயாரிப்பாளரும் எனது நண்பருமான டால்பின் குரியாகோஸ் என்பவர்தான் அந்த காரை புதிதாக வாங்கியுள்ளார். அப்படி வாங்கும்போது சென்டிமெண்டாக என் கையால் சாவியை பெற்றுத்தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி, நானே இந்த காரை வாங்கியது போன்று செய்திகள் பரவி விட்டன” என்று கூறியுள்ளார்.