அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல், அண்ணாத்த, கிருஷ்ணம் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மாமனிதன் படத்தில் நடித்தார். பென் என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார்.
அஞ்சலி நாயருக்கு ஏற்கெனவே அனீஷ் உபாசனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி நாயர் கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு அவர் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் அஜித் ராஜு என்ற உதவி இயக்குனரை ரகசிய திருமணம் செய்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை அஜித் ராஜு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.