'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது விர்ச்சுவல் முறையில் ஒரு படம் முழுவதும் தயாராக இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி விர்ச்சுவல் முறையில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார்.
மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் ஒரே சமயத்தில் உருவாகிறது. இந்த படத்தை கோகுல்ராஜ் பாஸ்கர் என்பவர் இயக்குகிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது என்றே தெரிகிறது.