ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் அலோன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம் இது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவம்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை வெறும் 18 நாட்களிலேயே நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதனை உறுதி செய்து தற்போது படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவித்துள்ளது படத்தை தயாரிக்கும் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம்.
கொரோனா முதல் அலை தாக்கத்திற்கு முன்னதாக மோகன்லால் நடிப்பில் துவங்கப்பட்ட ராம், ஆராட்டு ஆகிய படங்கள் இன்னும் முடிவடையாமல் இருக்கின்றன.. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம்-2 வெளியாகி விட்டது. அதன்பிறகு பிரித்விராஜ் டைரக்சனில் ப்ரோ டாடி படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது அலோன் படத்தையும் முடித்துவிட்டார் மோகன்லால்.




