ஓடிடிக்குப் பிறகு தியேட்டர்களில் த்ரிஷ்யம் 2
ஜூலை 01, 2021
Advertisement
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த "த்ரிஷ்யம் 2" படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது ஐந்து மாதங்கள் கழித்து படத்தை சினிமா தியேட்டர்களில் இன்று முதல் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல, அரேபிய நாடுகளில். யுஎஇ நாடுகளில் 27 தியேட்டர்களிலும், கத்தாரில் 8 தியேட்டர்களிலும், ஓமனில் 2 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இது குறித்த தகவலை படத்தின் நாயகன் மோகன்லாலே அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “த்ரிஷ்யம் 2 கடைசியாக பெரிய திரைகளை சென்றடைந்துவிட்டது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் சின்னத் திரையான டிவியில் பார்ப்பதை விட பெரிய திரையான சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் அனுபவம் தனிதானே.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!