திரைப்படங்களில் ‛கஞ்சா பயன்படுத்தும் காட்சி இருக்க கூடாது : ஜிவி பிரகாஷ்
ஆக 24, 2026
Advertisement
திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பமும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.
முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமான நிஞ்சா, தஞ்சாவூரில் இன்று துவங்கியது. நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். பட விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ‛‛தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா படம் உருவாகி வருகிறது. இந்த கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் . குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா" பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என தெரிவித்தார்.
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!