
தஞ்சையில் துவங்கிய ஜி.வி.பிரகாஷின் ‛நிஞ்சா படப்பிடிப்பு
"தலைவர் தம்பி தலைமையில்", "லவ் டுடே", "பார்க்கிங்" உள்ளிட்ட படங்களில் நடித்த பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற "பார்க்கிங்" திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், இப்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் "சூப்பர் ஹீரோ" என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முன்னதாக இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷை இசையமைக்க தான் அழைத்தனராம். ஆனால் கதை பிடித்துவிட அவரே நடிக்க சம்மதம் சொல்ல, பிறகு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக்கி உள்ளனராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!