Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மதுபானக்கடை

மதுபானக்கடை,Madhubanakadai
  • மதுபானக்கடை
  • புதுமுகம்
  • புதுமுகம்
  • இயக்குனர்: கமலகண்ணன்
11 ஆக, 2012 - 11:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மதுபானக்கடை

 

தினமலர் விமர்சனம்



ஒரு காலத்துல ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்து, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள வந்து, இப்போ... ஆதரவு, எதிர்ப்பு, போராட்டம்னு அரசியல்வாதிகளையே பிஸியா வைச்சிருக்கற மதுபான கடையோட ஒருநாள் நிகழ்வுதான் படம்.

வித்தியாசமான படம்னு சொல்லி கடைசிவரைக்கும் கதையை தேட வைக்காம... இந்த படத்தில் கதை ஏதும் தென்பட்டால், உங்கள் கற்பனையே!ன்னு ஆரம்பத்துலேயே அறிவிச்சு, மதுபான கடைக்கு வர்ற விதவிதமான மனிதர்களோட வித்தியாசமான நடவடிக்கைகளை காட்சிகளா மாற்றி படத்தை நிறைச்சிருக்காங்க. எல்லாருமே பயப்படுற அளவுக்கு சரக்கடிச்சு சலம்புற பெட்டிஷன் மணி, அந்த பெட்டிஷன் மணியையே மிரண்டு ஓட வைக்கற லவ் பெயிலியர் பார்ட்டி, ஓசிக்குடிக்காக பாட்டு பாடுற சின்ராசு, சாமி வேஷம் போட்டு பிச்ச‌ை எடுத்து குடிக்கிற ரெண்டு பேரு, ஒயின்ஷாப் இருக்கற இடத்துக்கு முன்னொரு நாள்ல் ஓனரா இருந்து, இந்நாள்ல மனநிலை பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் கப்பை எல்லாம் பொறுக்கி மண்ணை காப்பாத்த துடிக்கிற பைத்தியக்காரன், பார்ல வேலை பார்த்துக்கிட்டே முதலாளியோட பொண்ணுக்கு ரூட் விடுற ரபீக், டிகிரி படிச்சுட்டு பார் சப்ளையரா இருக்கற தண்டபாணி, பார்ல பாத்திரம் கழுவுற பாட்டியம்மான்னு படம் முழுக்க சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.

தண்ணீருக்குள்ள மூழ்கினவன், மூச்சுக்காத்தை தேடுற மாதிரி போதைக்காக தவிக்கிற குடி மகன்கள் கடையை லேட்டா திறக்கற டாஸ்மாக் ஊழியர், காந்தி ஜெயந்தி வியாபாரத்துகு்காக சரக்கை பதுக்கி வைக்கிற பெட்டிக்கடைக்காரர், கொடுத்து வைச்ச மாதிரி கை நீட்டுற போலீஸ்காரர், பார்ல வசூல் வேட்டை நடத்துற திருநங்கைகள், போலி சரக்கை சப்ளை பண்ற அரசியல் மாவட்டங்கள்னு ஒரு மதுபானக்கடையை சுத்தி அஞ்சாறு கேமராக்களை வைச்சு அப்படியே பதிவு பண்ண மாதிரி காட்சிகள் யதார்த்தமா இருக்கு. நாம தள்ளாடுற வரைக்கும் தான் அரசாங்கம் ஸ்டெடியா இருக்கும். நாம ஸ்டெடியாகிட்டா அரசாங்கமே தள்ளாடிடும்னு மணி பேசும் போதும், உங்க நாத்தம் தாங்க முடியாமத்தான்டா இந்த நாத்தத்தை குடிக்கிறோம்னு ஒரு துப்புரவு தொழிலாளி வெடிக்கும் போதும் வசனங்கள் வசீகரிக்குது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கு. ஆனா, காட்சிகளை கோர்க்கக்கூடிய கதைங்கற மெல்லிய இழை இல்லாததால ஒரிஜினல் சரக்கு மாதிரி விர்ர்ர்ன்னு ஏறியிருக்க வேண்டிய படம், போலிச்சரக்கு மாதிரி சப்ன்னு முடிஞ்சு போகுது.

மொத்தத்தில் "மதுபான கடை" -  மப்பு ஏறாத சரக்கு


ரசிகன் குரல் - இப்படி ஒரு படம் எடுக்கணும்!ங்கற ஐடியா, டைரக்டருக்கு எந்த பார்ல தோணுச்சோ!



-------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



இந்தப் படத்தில் கதை என்று ஏதாவது இருந்தால் அது உங்கள் கற்பனையே என்ற நக்கலான அறிவிப்போடுதான் படம் தொடங்குகிறது. கதை மட்டுமல்ல. சண்டை, டூயட், குத்துப்பாட்டு, அதிர்ச்சி தருகிற க்ளைமாக்ஸ் எதுவுமே படத்தில் கிடையாது. பேர் சொன்னால் தெரிகிற மாதிரி நடிகர்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் மீறி, “மதுபானக்கடை’ கவனிக்கத் தக்கதொரு படம் ஆகியிருக்கிறது.

போதை ஏறிவிட்டால் சமூகத்தை “நான்ஸ்டாப்’பாகச் சாடுகிற சீர்திருத்தவாதி, நாசூக்கான ஆங்கிலத்தில் நாலு பேரை ஏமாற்றிக் குடிக்கிற இளைஞன், “குடிகார நாய்ங்க எதைச் சாப்பிட்டால் என்ன?’ என்று எகத்தாளம் பேசுகிற பார் ஓனர், பாருக்கு ஓனர் ஆகும் கனவோடு பணிபுரியும் வேலையாள், ஓசியில் கட்டிங் போட்டுவிட்டுபாட்டுப் பாடுபவர், “ரொம்ப கசக்குமாங்கண்ணா?’ என்ற தயக்கத்துடன் முதல்முறையாகக் குடிக்கும் இளைஞன், வம்பு இழுப்பதற்காகவே குடிக்க வரும் ஊர்ப்பெரிசு... இப்படி கடைசி கால்மணி நேரம் வரை அறிமுகமாகிக்கொண்டே இருக்கும் கேரக்டர்கள்தான் மதுபானக்கடையின் பெரிய முதலீடு. அத்தனை பேரும் பதறாமல், தயங்காமல் நடித்து “சபாஷ்’ வாங்குகிறார்கள்.

நல்லது கெட்டது பேசியே சுற்றியுள்ளவர்களை நடுங்க வைக்கிற “பெட்டிஷன் மணி’யாக வரும் கவிஞர் என்.டி. ராஜ்குமார் அசத்தல் அறிமுகம். பாருக்கே டார்ச்சர் தரும் இவரை ஒரு சின்னப்பையன் கையெடுத்துக் கும்பிட வைத்துவிடுவது நச் காமெடி. பாரில் சர்வராக வரும் கார்த்தி வேல், “பார்’ ஓனர் மகள் தியானா இடையேயான துணிச்சலான காதல் காட்சிகளை அந்த அட்மாஸ்பியரில் நம்ப முடியவில்லை.

“நாங்க தள்ளாடுனாத்தான் கவர்ன்மெண்ட் ஸ்டெடியா இருக்கும்,’ “நீங்க சந்தோஷத்துக்குக் குடிக்கிறீங்க, நாங்க எங்க பொழப்புக்கு குடிக்கிறோம்’ என ஐயப்பனின் வசனம் குறி பார்த்து அடிக்கிறது. பார்தான் ஹீரோ என்பதைப் புரிந்துகொண்டு கேமராமேன் சுமீ பாஸ்கரனும், ஆர்ட் டைரக்டர் வினோமிர்தாத்தும் கதைக் களத்தைக் களைகட்ட வைத்திருக்கிறார்கள். இசையைப் பாய விடாமல், வெறும் சத்தங்களால் நிரப்ப வேண்டிய இடங்களை அப்படியே நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் வேத் சங்கர்.

குடிக்கிறவர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட குடிக்காதவர் மாதிரி ஆடியன்ஸை ஓரளவுக்கு மேல் நெளிய வைத்தவிடுவது - மதுபானக்கடையின் பலவீனம்.
குடியை காமெடி சரக்காகவோ அறிவுரைக்கான மேட்டராகவோ ஆக்காமல், கேண்டிட் கேமரா பாணியில் அப்படியே முன்வைத்த துணிச்சலுக்காக அறிமுக இயக்குநர் கமலக்கண்ணனைப் பாராட்டலாம்.

மதுபானக்கடை - தெளிவு

குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து (17)

bharani - sivagangai,இந்தியா
24 செப், 2012 - 07:22 Report Abuse
 bharani ஒரு குவாட்டர் அடிச்சாதான் பாதி படத்தையாவது பாக்கலாம்.
Rate this:
vegu - pudukai,இந்தியா
01 செப், 2012 - 02:28 Report Abuse
 vegu அவசியம் பார்கவேண்டியபடம்
Rate this:
ratnakumar - karur,இந்தியா
28 ஆக, 2012 - 12:36 Report Abuse
 ratnakumar அவசியம் பார்கவேண்டியபடம்
Rate this:
rvk - karur,இந்தியா
28 ஆக, 2012 - 12:16 Report Abuse
 rvk படம் ரொம்ப சூப்பர், வசனம் நெத்தியடி, ஐயப்பன் கீப் இட் அப்
Rate this:
கண்ணன் - tirunelveli,ஈரான்
27 ஆக, 2012 - 18:17 Report Abuse
 கண்ணன் கட்டிங் அடிச்சா மாதிரிதான் இருக்கு
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in