Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

துரோகி

துரோகி,Drohi
  • துரோகி
  • ஸ்ரீகாந்த், விஷ்ணு
  • பூனம் பஜ்வா, பூர்ணா
  • இயக்குனர்: சுதா கே.பிரசாத்
16 செப், 2010 - 15:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » துரோகி

தினமலர் விமர்சனம்

நட்பும் துரோகமும் கலந்து கட்டிய முழு நீள ஆக்ஷன் சப்‌ஜெக்ட்தான் துரோகி.

விஷ்ணுவும், ஸ்ரீகாந்தும் பள்ளிப்பருவ நண்பர்கள். ‌பொதுப்பிரச்னையில் தலையிடும் தங்களது பூஜா டீச்சரை வகுப்பறையிலேயே தீர்த்து ‌கட்டும் தாதாவை சின்ன வயசு ஸ்ரீ, ஸ்கெட் போட்டுக் கொடுக்க, சின்ன வயசு விஷ்ணு தீர்த்துக் கட்டுகிறார். இதை மோப்பம் பிடிக்கும் போலீஸ் சிறுவர்களை அழைத்து போய் விசாரிக்க... போலீசின் அடிக்கு பயந்து விஷ்ணுவை காட்டிக் கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். அப்புறம்... அப்புறமென்ன? அங்கு ஆரம்பிக்கும் அவர்களது ஈகோ மோதல் இருபெரும் தாதாக்களாக வளர்ந்த பின்பும் (அதிலும் ஒருவர் போலீஸ் தாதா) தொடர்கிறது. இறுதியில் நட்பு ‌தோற்றதா? து‌ரோகம் வென்றதா? என்பதை சொல்கிறது க்ளைமாக்ஸ் உள்ளிட்ட மீதிக்கதை!

ரவுடியிஸம் நிரம்பிய வடசென்னை‌வாசிகளான சிறுவனர்கள் கொலை செய்வதைக்கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் பேச்சும், நடவடிக்கைகளும் ஏதோ சொல்லிக் கொடுத்து செய்வது மாதிரியே இருப்பது போர். பசங்க பட பாதிப்பில் இப்போது வரும் படங்களில் எல்லாம் சிறுவர்கள் எபிசோட் ஜாஸ்தியாக இருப்பது தியேட்டருக்கு வரும் இளசுகளுக்கும், பெரிசுகளுக்கும் எந்தளவிற்கு பிடிக்கும் என்பது இப்படத்தின் பெண் இயக்குனர் சுதா.கே.பிரசாத் உள்ளிட்ட இயக்குனர்களுக்கே வெளிச்சம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் சதா சர்வநேரமும் முகம் நிறை கடுப்புடன் திரியும் வட‌சென்னை வாலிபராக வினு்ணு நச்சென்று நடித்திருக்கிறார் என்றால், ஸ்ரீகாந்த் தாதா தியாகராஜனின் வளர்ப்பு பிள்ளையாக அவரது சொந்த மகனையே கொன்றுவிட்டு, அதை அவரிடமே சொல்லும் தைரியசாலியாக டாலடித்து டச் செய்கிறார்.

ஆக்ஷன் பட்தில் கதாநாயகிகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுதான் இந்த படத்தில் நாயகிகளாக நடித்திருக்கும் பூஜம் பஜ்வா, பூர்ணா இருவருக்குமே. ஆனாலும் அதிலும் கொஞ்சம் ஜாஸ்தி முக்கியத்துவம் பூனம் பஜ்வாவிற்கு தரப்பட்டிருக்கிறது. அம்மா - பொண்ணு என டபுள் ஆக்டிங்கில் வருவதாலோ என்னவோ பூனம், பூர்ணாவைக் காட்டிலும் மனதில் நிற்கிறார். இவர்கள் இருவரைக் காட்டிலும் கெஸ்ட் ‌கேரக்டரில் வரும் பூஜாவும் அவர் கொலையுண்ட விதமும் படம் முடிந்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

தாதா நாராயணாவாக மம்பட்டியான் தியாகராஜன், வளர்ப்பு மகன் ஸ்ரீ வினுயத்திலும் வில்லனாக நடந்து கொள்வது எதிர்பார்த்ததுதான் என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பின் எதிர்பார்க்காத நடிப்பை தந்திருக்கிறார். தென்னவன், எஸ்.பி.பி. சரண், ஜெயாராவ், எஸ்.என்.லட்சுமி, மீரா கிருஷ்ணன், மாஸ்டர் கிஷோர், மாஸ்டர் வஸந்த் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

செல்வகணேஷின் இசையில் சம சம யம யம... எனத்தொடங்கி தொடரும் குத்துப்பாடல் ஒன்று ‌போதும்! செல்வகணேஷின் இசை, அல்போன்ஸ் ராயின் ஒளிப்பதிவு ஆகியவற்றின் உதவியுடன் பெண் இயக்குனர்கள் மென்மையான கதைகளையே இயக்குவார்கள் எனும் லாஜிக்கை உடைத்திருக்கும் பெண் இயக்குனர் சுதா கே.பிரசாத், ஆண் இயக்குனர்களையே மிஞ்சும் விதமாக படத்திலும், கதையிலும் எக்கச்சக்க லாஜிக் மீறல்களையும் செய்திருப்பதுதான் கொடுமை.

துரோகி : ரசிகர்களுக்கு நம்பிக்கைத் துரோகி ஆகாதது ஆறுதல்!



வாசகர் கருத்து (16)

saravanan - karur,இந்தியா
30 அக், 2010 - 12:50 Report Abuse
 saravanan mokkai
Rate this:
வெங்கட் ஈஸ்வரன் - Bangalore,இந்தியா
21 அக், 2010 - 15:48 Report Abuse
 வெங்கட் ஈஸ்வரன் படம் சூப்பர் ..... பூர்ணா சூப்பர் ஒ சூப்பர் ..... விஷ்ணு கொன்னுட்டார் அக்டிங் ல ...
Rate this:
vijayanandh - trichy,இந்தியா
14 அக், 2010 - 11:21 Report Abuse
 vijayanandh super
Rate this:
dhanabal - coimbatore,இந்தியா
13 அக், 2010 - 17:45 Report Abuse
 dhanabal ஸ்கூல் பசங்க எப்பவும் நல்லதுதான் செய்வங்கான சொல்லற மாதிரி ஒரு படம் எடுங்க மேடம் சுதா
Rate this:
குப்தா - TINDIVANAM,இந்தியா
09 அக், 2010 - 14:54 Report Abuse
 குப்தா நாட் BAD
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

துரோகி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in