இர்பான் கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஊழலுக்கு எதிராக போராடும் சமூகம் சார்ந்த திரில்லர் படம் தான் மதாரி. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, நிர்மலர் குமார் எனும் இர்பான் கான், தன் ஒற்றை மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அதிகாரி ஒருவரின் அலட்சியத்தால் தன் மகனையும் இழக்க பொங்கி எழுகிறார் இர்பான். தன் மகன் சாவுக்கு நியாயம் வேண்டியும், ஊழலுக்கு எதிராகவும் போராட களமிறங்கும் இர்பான், உள்துறை அமைச்சரின் மகன் ரோகனை கடத்துகிறார். அமைச்சரின் மகனை மீட்க போலீஸ் அதிகாரியாக ஜிம்மி ஷெரிகில் களமிறங்குகிறார். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் படத்தின் கதை. அமைச்சரின் மகனை ஜிம்மி மீட்டாரா?, இர்பானின் கோரிக்கை நிறைவேறியதா? என்பது படத்தின் விறுவிறுப்பான மிதீக்கதை.
வழக்கம் போல இர்பான் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பில் தனக்கு நிகர் தான் என மீண்டும் ஒரு முறை நிரூப்பித்திருக்கிறார். இர்பானை போலவே குழந்தை நட்சத்திரமாக வரும் விசேஷ் பன்சால், போலீஸ் அதிகாரியாக வரும் ஜிம்மி ஷெரிகில் ஆகியோரும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
ராக்கி ஹேண்ட்சம் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் நிஷிகாந்த் காமத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் படத்தின் கதையே முன்கூட்டிய யூகிக்க முடிவது இயக்குநரின் பலவீனத்தை காட்டுகிறது. இசை, வனசங்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவைகளும் பெரிதாக ஈர்க்கவில்லை, அதேசமயம் ஓகே., என்ற அளவில் இருக்கிறது.
தன் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டி இர்பான் கான் களமிறங்கி போராடிலும், மற்றொருபுறம் தனி மனிதன் ஒருவராக முழுக்க முழுக்க ஊழலுக்கு எதிராகத்தான் அதிகம் போராடுகிறார் இர்பான். படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் இர்பானின் நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.