விமர்சனம்
--------------------------------------------
குமுதம் விமர்சனம்
மூன்று விதமான அப்பாக்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், எந்தமாதிரியான கல்வி கொடுக்கிறார்கள் என்பது தான் அப்பா படத்தின் பேஸ்மெண்ட்.
பெற்றோர் விருப்பத்தை பிள்ளைகளின்மேல் திணிக்காத வாழ்க்கைக்கல்விதான் சிறந்தது என செயல்படுத்தும் சமுத்திரக்கனி. இப்படித்தான் அப்பாக்கள் இருக்க வேண்டும் என்று ஏங்க வைக்கிறார்.
தன் முடிவுகளை மகன்மேல் திணிக்கும் தம்பி ராமையா வழக்கமான நடிப்பு என்றாலும், தனியார் பள்ளியில் சேர்த்ததால் மகனை இழந்து கலங்குவது உருக்கம்.
நாம இருக்குற இடந்தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா என்று பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கும் நமோநாராயணன் என்கிற அப்பாவின் நடிப்பு நிஜ வார்ப்பு.
இவர்களின் மகன்களாக வரும் விக்னேஷ் ராகவ், உயரம் குறைநத நசத், தோழிகளாக கேப்ரியல்லா, யுவலட்சுமி என ஒவவொருவரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் படம் மேலும் உயிர்ப்புப் பெறுகிறது. மார்க், புகழ், வேலை என்ற நிர்ப்பந்தத்தால், மாணவர்களைத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளும் கருவியாகத்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டியிருப்பதால், சின்னச் சின்ன குறைகள் மறைந்துபோயின. சபாஷ் கனி!
அப்பா - பாடம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே


























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!