
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி தள்ளிவைப்பு?
அதற்கடுத்த நாள் அக்டோபர் 16ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தனுஷ், மம்முட்டி நடித்த "ஓம்" படத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்து, பின்னர் நவம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள்.
அதேசமயம் விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" படத்தை அக்டோபர் 16ம் தேதி வெளியிடுவதாக செப்டம்பர் 23ம் தேதியன்று அறிவித்திருந்தார்கள். தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனைப்படி இந்த தள்ளி வைப்பு நடக்க உள்ளதாம்.
அடுத்தடுத்த வாரங்களில் சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் "அப்பா குட்டி" க்கான சரியான தேதி ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!