
கடந்த வாரம் வந்த படங்களின் வரவேற்பு எப்படி
கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி, விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. துல்கர் நடித்த ஆகாயத்தில் ஒரு தாரகை படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. ஆனாலும் தெலுங்கு டப்பிங் படம் என்பதால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால், அந்த பட வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் படத்துக்கு ஓரளவு வரவேற்பு.
கடந்த சில வாரத்தில் வந்த படங்களில் சூர்யா நடித்த சீன் மட்டும் ஓரளவு லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. அதற்கு முன்பு ஜெயிலர் 2 நல்ல லாபத்தை கொடுத்தது. ஹிந்தி, தெலுங்கு, மலையாளத்தில் படத்தை நடிகர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழில் அது குறைவு. ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டும் தனுஷ் கலந்து கொண்டார். சூர்யாவும் அப்படியே. படம் ரிலீசுக்கு ஒருநாள் முன்புதான் படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேசினார். அதனால் படம் மக்களிடம் போய் சேரவில்லை. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுவதில்லை என்கிறார்கள். இந்த வாரம் 13 படங்கள் வருகிறது. அனைத்தும் சின்ன பட்ஜெ ட் படங்கள் என்பதால் பெரியளவில் வசூல் இருக்காது என்று கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…