
வந்தாச்சு திரிஷா பேரவை : வலைதளங்களில் அமர்க்களம்
தற்போது, நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் ‛இளைய புரட்சித் தலைவி திரிஷா" பேரவை துவங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கட்சிகளில் இருந்த ராஜகோபால் என்பவர் தொடங்கியதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். திரிஷா வணக்கம் சொல்வது போன்ற புகைப்படத்துடன், "பதவிக்காக அல்ல... தமிழக மக்களின் உரிமைக்காக" என்ற வாசகத்துடன் லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த லோகோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், கேலி, கிண்டல் மீம்ஸ்களை வெளியிட்டு அமர்க்களம் செய்து வருகின்றனர். திரிஷாவின் ஒப்புதலோடு தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. அவரே விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…