
அப்பாகுட்டி : விஜய் ஆண்டனியின் செண்டிமென்ட் நம்பிக்கை
இந்த படத்தில் அவருடன் பிரீத்தி அஸ்ராணி பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஜென்சன் திவாகர், லிசி ஆண்டனி, மூணார் ரமேஷ், முருகானந்தம்னு பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி நடித்திருப்பதோடு படத்திற்கு இசையும் அமைத்து எடிட்டிங் பணிகளையும் செய்து வருகிறார். படம் தீபாவளி வெளியீடாக வருகிறது. படத்தை பிளாக்மெயில், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மாறன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: அப்பாவுக்கும் மகளுக்குமான உணர்வுப்பூர்வமான கதை. தந்தை - மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டது இந்தப்படம். விஜய் ஆண்டனி, சினிமா புரொடக் ஷன் மேனேஜராக நடித்துள்ளார். ஆனால் படத்தின் கதை சினிமா பற்றியதல்ல. "பிச்சைக்காரன்" படத்தில் அம்மாவிற்காக ஒரு பெரிய தியாகத்தை விஜய் ஆண்டனி செய்வார், இந்த படத்தில் மகளுக்காக செய்கிறார். அந்த வகையில் இதுவும் கிரைம் திரில்லர் கலந்த ஒரு செண்டிமென்ட் படம். பார்வையாளர்கள், தங்களை படத்தோடு தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. என்கிறார் மாறன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!