இளம் இயக்குனர் அமுதேஸ்வர் இயக்கத்தில் , நடிகர் ஜெயராமின் வாரிசு காளிதாஸுடன் பிரபு , ஆஷ்னா சாவேரி, பூஜா குமார் , எம்.எஸ் .பாஸ்கர்....ஆகியோர் நடிக்க., நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிப்பில் ஈசன் புரொடக்ஷன்ஸ் பேனரில் ., "ஈகோவை தூக்கி தூரப் போட்டு விட்டால் ., எல்லோரது தீராத பிரச்சனையும் தீரும் ...."எனும் மெஸேஜூடன் லவ் ,காமெடி & சென்டிமெண்ட் என ஜனரஞ்சமாக முழுக்க,முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு கண்டு வெளிவந்திருக்கும் படம் தான் "மீன்குழம்பும் மண்பானையும் "
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை எனும் பிரபு மீன் குழம்பு கடை வைத்து பெரும் புள்ளியாக திகழுகிறார். சிறு வயதிலேயே தாயை இழந்தஇவருடைய ஒரே மகனான நாயகன் கார்த்திக் எனும் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகிகல்லூரியில் படித்து வருகிறார். நாயகி ஆஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி முட்டலும் மோதலும் ஏற்பட்டு வருகிறது.. மேலும் ., ஆஷ்னாவால் காளிதாசுக்கு மற்றகல்லூரி மாணவர்களுடனும் முட்டலும் மோதலும் இருக்கிறது. மீன் கடை முதலாளி பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போலவும் பழக வேண்டும்...என்று ஆசை இருக்கிறது.ஆனால்,காளிதாசால் பிரபுவுடன் சகஜமாக பேசிப் பழகமுடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சின்ன ,சின்ன.,பிரச்சனைஏற்படுகிறது.
இந்த பிரச்சனை இருவருக்குள்ளும்கருத்து வேறுபாட்டை உருவாக்கி விடுகிறது. இதை அறியும் பிரபுவின் நண்பர் ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனையைதீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் தன்.,தனித்தீவு வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு சாமியாராக வரும் கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனைகளைகேட்டறிகிறார். அதன் பின் .,இவர்களது பிரச்சினைக்கு வித்தியாசமாக தீர்வு காண முயலும் சாமியார் கமல்.,தனது ஞானதிருஷ்டியின் படி.,அவர்களது உடம்பு உருவ அமைப்பை அப்படியே விட்டுவிட்டு அவர்களுக்குள் இருக்கும் ஆன்மாவை பரஸ்பரம் மாற்றிவிடுகிறார் . அதாகப்பட்டது அப்பாபிரபுவின் உடம்பில் பிள்ளைகாளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல்பாடு ஆகியவை கொண்ட ஆன்மா இருக்குமாறும் ,காளிதாசின் உடம்பில் பிரபுவின் வெள்ளாந்தி தனமும் பொறுப்பான சிந்தனையும் நிரம்பிய ஆன்மா இருக்குமாறும் மாற்றிவிடுகிறார்.இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆஷ்னா சவேரி ,பூஜா குமார் ஆகியோருடனான இருவரது காதல் களியாட்டங்களையும் ., கலாட்டக்களையும், கலக்கலாகவும் , கலர்புல்லாகவும் காமெடி கலந்தும் சொல்ல முற்பட்டிருக்கிறது" மீன் குழும்பும் மண்பானையும் " திரைப்படத்தின் கரு, கதை , களம் ,காட்சிப்படுத்தல் எல்லாம்.
கார்த்திக்காக வரும் இப்பட நாயகர் காளிதாஸ்.கார் ரேஸூம் ,ஆஸ்னா சவேரியும் சகிதமாக கலக்கியிருக்கிறார். காளிதாசின் நடிப்பும் பரவாயில்லை .. ஒரு மாதிரி ., பதினாறடி பாயும் புலிக்குட்டியாக பளிச்சிட்டிருக்கிறது! காளிதாசின் அப்பாவாக அண்ணாமலையாக வரும்பிரபுவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி! வயதுக்கு ஏற்ற பொறுப்பானவராகவும், காமெடியாகவும் படம் முழுக்கநடித்திருக்கிறார் இவருடைய இளமையானநடிப்பும் பாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமாக இருக்கிறது.
இருநாயகியரில் காளிதாஸின்நாயகியாக வரும் ஆஷ்னா சவேரிபடம் முழுக்க பக்கா கிளாமராக வருகிறார். தெரிகிறார் .நடிப்பில் ....ம் ,ஹும். இன்னொரு நாயகியாகவும் , தாதாகேங்கின் பெண்லீடர் மாலாவாகவும் நடித்திருக்கும் பூஜா குமார்... செம செக்ஸி லுக்கில் பிரபுவை பிக்-அப் செய்ய சுற்றும் காட்சிகள் செம்ம..நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் இந்த அசரடிக்கும் அழகி !
போதகராக ,சாமியாராக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இரண்டே காட்சிகளில் கெஸ்ட் ரோலில் கவாமி விவேகானந்தர் லுக்கில் வந்தாலும் மனதில் நிற்க்கிறாரகமல். "சாமி ., நீங்க உலக நாயகன் கமல் மாதிரியே இருக்கீங்களே ... ". என பிரபு கேட்பதற்கு ., "என் பாத்ரூம்ல ஒரு நா அவன் குளிச்சிட்டான்..அதான்..."எனும் கமலின் டைம்மிங் டயலாக் - இப்படத்தின் படத்தின் காமெடி ஹைலைட்.எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர்அவர்களுக்கே உரிய உயரிய நடிப்பால் ரசிக்கவைக்கிறார்கள். காமெடி சிவாஜி , இளவரசு , ஓய்ஜி மகேந்திரா அவரது மனைவி சுதா உள்ளிட்டோரும் திரையில் வந்து போகிறார்கள் .
லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியா மேலும், அழகாக ஜொலிக்கிறது. இமானின் இசையில் ., பக்கு பக்கு ... சின்ன மாமியே .. உள்ளிட்ட பாடல்களும் ,ரீ-மிக்ஸ் ... பாடலும் தாளம் போட வைக்கும் ரகராகம். பின்னணி இசையும் பரவாயில்லை!
குணத்தில் எதிரும் , புதிருமாக இருக்கும் அப்பா- பிள்ளையின் ஆன்மா மற்றும் ஆக்டி விட்டீஸ் பரஸ்பரம் மாறினால்., என்னாகும் எனும் வித்தியாசமான கதையை தேர்வு செய்து, முழுக்க , முழுக்க மலேசியாவிலேயே மொத்தபடத்தையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் கொஞ்சம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார்.... என்பது ஆறுதல்!
மீன் குழம்பும் மண்பானையும் எனும் டைட்டில் ... கமலின் கெஸ்ட் ரோல் , மற்றும் மலேசியா பேக் - ரவுண்ட் .... உள்ளிட்டவை படத்திற்கு பலம் என்றாலும் ., நம்ப முடியாத லாஜிக் இல்லாத கதையும் காமெடி என்ற பெயரில் எம்.எஸ்.பாஸ்கர் - தளபதி தினேஷ் எபிசோட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் .... பலவீனம் .
மொத்தத்தில் ., மீன் குழம்பும் மண்பானையும் - டைட்டிலில் இருக்கும் வாசமும் மணமும் பானையில் ... சாரி .,படத்தில் இல்லாதது வருத்தம்! " .