Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குபேர ராசி

குபேர ராசி,Kubera Rasi
  • குபேர ராசி
ஆர்.ராதா கிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் இது.
24 அக், 2015 - 09:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குபேர ராசி

தினமலர் விமர்சனம்




ஹீரோ - பாபநாசம் ரோஷன்

ஹீரோயின் - அபிராமி

இயக்கம் - ஆர்.ராதா கிருஷ்ணன்


பாபநாசம் படத்தில் கமலின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டு, கமல் குடும்பத்தால் பழி தீர்க்கப்படும் பாத்திரத்தில நடித்திருந்த ரோஷன் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் வங்கி கொள்ளை சம்பந்தமான பரபரப்பு படம்தான் குபேர ராசி.


கதைப்படி, கும்பகோணம், சாக்கோட்டை பகுதியைச் சார்ந்த தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி தம்பதிகளின் வாரிசு ரோஷன், திருச்சி லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கம் நிருபராக பணி புரிகிறார். அப்பா தலைவாசல் விஜய், பைனான்ஸ் கம்பெனி நடத்தி, பார்ட்னர் காதல் தண்டபாணியை நம்பி பல லட்சங்கள் ஏமாறுகிறார். அதனால் ஊர் மக்களுக்கு 50 லட்சம் தர வேண்டி இருக்கிறது. சொந்த வீட்டை விற்று கடனை அடைக்கலாம் எனப் பார்த்தால் வேறு யாருக்கும் விற்க விடாமல், ஏரியா கவுன்சிலர் அடிமாட்டு விலைக்கு அதை அடித்துப் பிடுங்க பார்க்கிறார். இந்த கடன் பஞ்சாயத்தால் ரோஷனின் டி.வி., வேலையும் பறிபோகிறது.


நண்பரிடம் கடன் வாங்கி, கழுத்தை நெறிக்கும் ஒரு சில கடன் பிரச்சினைகளை மட்டும் தீர்க்கலாம் என நண்பனுக்கு போன் செய்கிறார். அது ராங் கால் ஆகிறது. அதில் எதிர்முனையில் பேசும் நபர், ரோஷனுக்கு பத்து லட்சம் தந்து உதவுவதுடன், மேலும் உதவ தயாராய் இருக்கிறார். ராங் கால் நபர்., ரோஷனுக்கு லட்சகணக்கில் உதவ காரணம் என்ன? ரோஷனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு அடுத்தடுத்து அவர் செய்யும் ராங்-கான காரியங்கள் என்ன, என்ன..? எனும் விறுவிறுப்பான கதையுடன் ரோஷனின் வித்தியாசமான காதலையும் கலந்து கட்டி குபேர ராசி படத்தை ரசிகனை வசியப்படுத்தும் விதத்தில் கொண்டு சென்றிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணன்.


கதாநாயகராக பாபநாசம் படப் புகழ் ரோஷன், பைனான்ஸ் கம்பெனியில் நஷ்டம் அடைந்து கஷ்ட ஜீவனம் நடத்தும் அப்பாவைக் கண்டு பரிதவிப்பதில் ஆகட்டும், தங்களது வங்கி கொள்ளையால் போலீஸ் சித்ரவதைக்கு உள்ளாகி வேலையையும் இழக்கும் அப்பாவி வங்கி பெண் ஊழியரின் மீது கொள்ளும் கரிசனம் காதலாக உருமாறுதலில் காட்டியிருக்கும் முக பாவங்களில் ஆகட்டும், சகலத்திலும் பாத்திரத்துடன் ஒன்றி பளிச்சிட்டுள்னார். பலே, பலே!


கதாநாயகி அபிராமி அப்பாவி வங்கி பெண் ஊழியராக அசத்தல்! விவரம் அறியாமல் ரோஷன் மீது அவருக்கு வரும் காதல் கலக்கல்!


குபேர ராசிக்காரராக பெரிய வங்கி கொள்ளையனாக வரும் சாந்தாராம் - பிஜோ அசால்ட்டாக செய்யும் கொள்ளையில் சபாஷ் ராம் என கூவ வைக்கிறார். தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, மனோஜ், பாலாம்பிகா உள்ளிட்டோரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.


கணேஷ் ராகவேந்திராவின் மிரட்டும் இசை, தில்ராஜின் மிளிரும் ஒளிப்பதிவு, சுரேஷ் அர்ஸின் பலே படத்தொகுப்பு, தமிழ் மணவாளனின் அழகிய தமிழ்... உள்ளிட்ட பலங்களுடன் ஆர்.ராதா கிருஷ்ணனின் இயக்கத்தில், பரபரப்பான வங்கி கொள்ளையை இதுவரை யாரும் காட்டிடாத விறுவிறுப்புடன் காட்டி வெளிவந்திருக்கும் குபேர ராசியில் கடைசி வரை குற்றவாளி பிடிபடாததும், காதலன் ரோஷனும் தன் இந்த நிலைக்கு காரணமான ஒருவன் என்பது நாயகி அபிராமிக்கு தெரிய வராமலே, படம் முடிந்து போவதும் சற்றே உறுத்தல்... ஆனால், அந்த ஒரு சில குறைகளையும் தாண்டி, குபேர ராசியில், ரசிகனை குதுகளிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.


ஆகவே, குபேர ராசி நிச்சயம் ரசிகனை வசீகரிக்கும் என நம்பலாம்!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in