டோலிவுட்டின் முக்கியமான தாயாரிப்பாளர்களில் இவரும், இந்த முறை அட்டகாசமான காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் ஸ்ரீதர். சுதீர் பாபு மற்றும் நந்திதா நடிப்பில் தெலுங்கு திரை உலகில் வெளியாகிருக்கும் இப்படம் கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சார்மினார் படத்தின் ரீமேக் ஆகும்.
படத்தில் கிருஷ்ணா மற்றும் ராதா இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள், இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகவே படிக்கின்றனர். இருவரும் நல்ல புரிதலுடன் பழகி வருகின்றனர். இப்படியாக கதை நகர்ந்து கொண்டு இருக்கையில் கிருஷ்ணா ராதாவின் மீது காதல் கொள்கிறான். அதை அவளிடம் சொல்ல நினைக்கிறான்.இப்போது விதி விளையாடுகிறது இருவரையும் பிரிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள் (எப்படியும் க்ளைமேக்ஸில் சேர்ந்துவிடுவார்கள்). சில காலத்திற்கு பிறகு மீண்டும் அதே சூழ்நிலை அவளை பார்க்கிறான். இப்போது நல்ல வேலையிலும் இருக்கிறான்.கிருஷ்ணா சந்தித்த பிரச்சனை என்ன? ராதாவிடம் காதலை சொன்னானா?? இருவரும் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
சுதீர் பாபுவிற்கு இது ஒரு முக்கியமான படமே, மொத்த படத்தையும் தனி ஆளாக தாங்கி பிடிக்கிறார். அதும் மிக நேர்த்தியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் கைதட்டலும் பெறுகிறார். படத்தில் வெவ்வேறு கால கட்டத்தில் காட்டப்படும் உயிரோட்டமான காதல் காட்சிகள் அழகு. படத்திற்கு வில்லன் இல்லாத குறையை அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பிரகதி நிறைவு செய்கிறார். கல்லூரி கால காதலை காட்சிபடுத்திய விதத்திற்கு நிச்சயம் இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால், தேவையில்லாமல் இரண்டு பாடல்கள் வந்து படத்திற்கு வேகத்தடை ஆகின்றன. அதுபோக இடைவேளைக்கு பிறகு திரைக்கதை சற்றே பாதை மாறிவிட்டும் பின்னர் க்ளைமேக்ஸ் நோக்கி நகர்கிறது.தொழில்நுட்பரீதியாக படத்தை எந்த குறையும் சொல்ல முடியாது. இயக்குனர் சந்த்ரு பொழுது போக்கு அம்சங்களை இரண்டாம் பாதியில் சேர்த்தது மட்டுமே படத்தின் பலவீனம்.
உங்களுக்கு காதல் கதை பிடிக்குமா, நிச்சயம் இதை நீங்கள் பார்க்கலாம் ரசிக்கலாம்
.
கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி - அழகிய காதல் கதை