அறிமுக இயக்குனரான கார்த்திக் வர்மாவின், ''பம் போலேநாத்''தில் சினிமாவிற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. அதாவது போதை பொருள், வைர கடத்தல், காதல், சேசிங் என அனைத்தும் உள்ளது. ஆனால் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைய அனைத்து கலவைகளையும் சரியாக சேர்க்க வேண்டும்.
இந்த படத்தின் துவக்கத்தில் கிருஷ்ணா (நவீன் சந்திரா) என்ற ஒரு தாதாவும், அவனுடைய நண்பனான பிரவீனும் (பிரவீன்) சேர்ந்து திருடிய அரிய ஆப்ரிக்க வைரத்தை சேத் (பூஷணி கிருஷ்ணா முரளி) என்பவரிடம் விற்க செல்கின்றனர். இதனிடையே வேலை இல்லாத சாப்ட்வேர் படித்த விவேக் (நவ்தீப்) ஏ டி எம் யில் ரூ 2 லட்சத்தை திருட திட்டமிடுகிறார். அதாவது அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்து நல்ல வேலையில் சேரலாம் என்று விவேக் நினைக்கிறார். அதற்காக விவேக்கும் அவரது நண்பரும் சேர்ந்து ஏ டி எம் ஒன்றிக்கு செல்கின்றனர். இந்நிலையில் சேத்தின் இடத்தில் வருமான வரி சோதனை நடக்கிறது. வைரத்தை பெற்று கொண்ட சேத் அதற்கான பெரும் பணத்தை கிருஷ்ணாவிடம் கொடுத்து கண் காணாத இடத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். ஏ டி எம்மிற்கு வரும் விவேக்கின் காலடியில் பண மூட்டை ஒன்று கிடக்கிறது. அதன்பிறகு படத்தில் பணத்தை பெறுவதற்காக ஒருவரை ஒருவர் விரட்டுவது தான் கதை.
இந்த படத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் நிறைய பேர் நடித்துள்ளனர். அவர்களில் புஷணி மற்றும் ருத்வி போன்றோர் அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள்.
நவ்தீப்பின் காதலியாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். பிரபல டி வி புகழ் பிரதீப் மச்சிகோண்டா நடித்துள்ளார். இசையை விரும்பும் வித்தியாசமான வில்லனாக பங்கஜ் கேசரி நடித்துள்ளார். இது தவிர ஸ்ரீலட்சுமி, ப்ரச்சி மற்றும் ஸ்ரேயா ஆகியோரும் நடித்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படம் என்றாலும் அனைத்து கதாபாத்திரங்களும் கட்சிதமாக நடித்துள்ளனர்.
பரணியின் கேமராவும், சாய் கார்த்திக்கின் இசையும் படத்திற்கு ஓரளவு வலு சேர்கின்றது. இயக்குனர் கார்த்திக் வர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். அவர் திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கதை களமும் இன்னும் வலுவாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
புதுமுக இயக்குனர்களின் படங்கள் அதிக அளவில் வெளி வரும் வேளையில், அவர்களின் முயற்சியை பாராட்ட வேண்டும். எனினும் முதல் படத்திலேயே வெற்றி என்பதுதான் முக்கியம்.
''பம் போலேநாத்'' - ''முழுமை பெறவில்லை''