Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஷரபாத் கெய் தெல் லெனே (இந்தி)

ஷரபாத் கெய் தெல் லெனே (இந்தி),sharafat gayi tel lene
  • ஷரபாத் கெய் தெல் லெனே (இந்தி)
  • ஜயீத் கான்
  • தேனா தேசாய்
  • இயக்குனர்: குர்மீத் சிங்
17 ஜன, 2015 - 12:24 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஷரபாத் கெய் தெல் லெனே (இந்தி)

ஷராபத் கயி டெல் லெனே


நட்சத்திரங்கள் : ஜயீத் கான் ரன்விஜய் சிங், டெனா தேசே

டைரக்டர் : குர்மீத் சிங்

தயாரிப்பாளர் : தேவிந்தர் ஜெயின், அகிலேஷ் ஜெயின்


காமெடி திரில்லர் படமாக உருவாகியுள்ள ஷராபத் கயி டெல் லெனே படம், பாமர மனிதனின் தினவாழ்க்கை குறித்து விவரிக்கிறது.


மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பிருத்வி குரானா (ஜயீத் கான்) வின் பேங்க் அக்கவுண்டில், ரூ. 100 கோடி எதிர்பாராதவிதமாக கிரெடிட் ஆகிறது. அந்த பணம், முன்னணி கேங்ஸ்டர் கும்பலின் பணம் என்பது விசாரணையில் தெரியவருகிறது. இந்த பணம், எவ்வாறு பிருத்வியின் வாழ்க்கையை மாற்றுகிறது, அப்பணத்தால், பிருத்வி எதிர்கொள்ளும் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்ல முனைந்திருக்கிறது ஷராபத் கயி டெல் லெனே படம்

படத்தின் கதை சிறப்பாக உள்ளபோதிலும், தெளிவில்லாத திரைக்கதையினால், படம், கடலில் மூழ்கிய படகு போன்று உள்ளது.


டைரக்டர் குர்மீத் சிங், படத்தை, சமூக கருத்துகளோடு, காமெடியாக சொல்லவேண்டும் என்று நினைத்து, படத்தை கேலிக்குரியதாக மாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும், உற்சாகத்துக்கு பதிலாக, சோகத்தை, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிசாக அளி்க்கின்றன. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு, தண்டவாளங்கள் போல எப்போதுமே இணையாமல், பிரிந்தே உள்ளன. 1980ம் காலத்திய, பின்னணி இசை, படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது. கதை சிறப்பாக இருந்தபோதிலும், தெளிவற்ற திரைக்கதையால், கடலில் மூழ்கிய படகு போன்று படம் உள்ளது. வசனங்கள், ஏன்டா படத்துக்கு வந்தோம் என்று நமக்கு சோகத்தையே வரவழைக்கின்றன. ஆர்ட் மற்றும் காஸ்டியூம் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி உள்ளது.


ஜயீத் கானிற்கு, இந்த படத்தில் நடிக்க துளிகூட விருப்பம் இல்லை போலும், அந்த விருப்பமின்மையை, படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெள்ளத்தெளிவாக தொடர்ந்து காட்டியிருக்கிறார் ஜயீத் கான். டெனா தேசாயின் நடிப்பு, படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் கேமரா முன் வந்துள்ள ரன்விஜய் சிங்கும், படத்தில் சோபிக்கவில்லை. மற்ற நட்சத்திரங்களின் நடிப்பும் சொல்லும்படி இல்லை.


எருமை போன்று பொறுமை இருந்தால், ஷராபத் படத்தை தாராளமாக இருக்கலாம்....


ரேட்டிங் : 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in