Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மொசக்குட்டிž

மொசக்குட்டிž,Mosakutty
09 டிச, 2014 - 16:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மொசக்குட்டிž

தினமலர் விமர்சனம்


ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த ஜீவனின் இயக்கத்தில் ஜீவனுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் மொசக்குட்டி


திருட்டு, புரட்டு..என ஜகஜால கில்லாடி என்றாலும், அது வெளித்தெரியாமல் பெரும்புள்ளியாக பள்ளப்பட்டி பகுதியில் பவனி வருகிறார் விருமாண்டி - ஜோ மல்லூரி; அவரது அண்டர்கிரவுண்ட் வேலைகள் அனைத்திற்கும் அறிவிக்கப்படாத ரெப்ரஸன்டேட்டீவ்களாக குறைந்த கூலிக்கு செயல்படுகின்றனர் மொசக்குட்டி பாலா -வீராவும், சென்ட்ஸ்-சென்டராயனும்!.


ஒருநாள் ஓடும் லாரியில் இருந்து இவர்கள் இறக்கி கடத்தும் பார்சல்கள் விருமாண்டி - ஜோ மல்லூரியின் மகள் கயல்விழி - மகிமாவை, போலீஸ் இழுத்து செல்லும் அளவிற்கு குடைச்சலை கொடுக்கிறது. நாயகி கயலை, போலீஸ் பிடியில் இருந்து விடுவித்து, களவு செய்தது நான் தான் என களம் இறங்கும் நாயகன் மொசக்குட்டி மீது நாயகி கயல் - மகிமாவிற்கு இருந்த ஈர்ப்பு காதலாக மாறி கசிந்துருகுகிறது. அப்புறம்? அப்புறமென்ன?... களவு கதை போய் ஸ்கிரீனில் இவர்களது காதல் கதை விரிகிறது.


மொசக்குட்டிக்கு ஜோ மல்லூரி குடும்பத்தாரால் செம மொத்து கிடைக்கிறது. கூடவே மகள் மகிமாவை கேரளா இடுக்கியில் இருக்கும் தன் தம்பி காசி - பசுபதியின் வீட்டிற்கு நாடு கடத்துகிறான் விருமாண்டி - மல்லூரி.


விடுவாரா? வீரா - மொசக்குட்டி...? குத்துயிரும், கொலை உயிருமாக கிடந்த தன் உடம்பில் பட்ட காயங்கள் ஆறியதும் நாயகியைத் தேடி இடுக்கிக்குப் போகிறார். அண்ணன் ஜோ மல்லூரி்கை காட்டிலும் பெரும் தில்லாலங்கடியான காசி - பசுபதியின் கண்காணிப்பில் இருந்து நாயகி கயல் - மகிமாவை நாயகன் மொசக்குட்டி - வீரா மீட்டு கரம்பிடித்தாரா?.. மீளாத்துயருக்குள்ளானாரா?...என்பது இடுக்கி மலை எழில் பின்னணியில் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கும் மொசக்குட்டியின் மீதிக்கதை!.


மொசக்குட்டி பாலாவாக வீரா அறிமுகம், புதுமுகம் எனத்தெரியாத அளவிற்கு ஆட்டமும், பாட்டமுமாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கயல்விழி - மகிமா, காதல் மொழியை கண்களாலும், கட்டுடலாலும் பேசுகிறார். பேஷ்..பேஷ்..! விருமாண்டி - ஜோ மல்லூரி , காசி - பசுபதி இருவரும் போட்டி போட்டு மிரட்டி இருக்கின்றனர். சென்ட்ராயன் மினிமம் கியாரண்டி, மிடில்கிளாஸ், லோ கிளாஸ் நண்பன் பாத்திரங்களுக்கு கச்சிதம்!. தண்ணிவண்டி எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், சிசர் மனோகரின் செல்போன் , ஆக்ஸிடெண்ட், எபிசோட் முதலில் சிரிப்பாகவும், பின் சீரியசாகவும் இருக்கிறது.


இயக்குனர் ஜீவனின் சகோதரர் மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் வழக்கம்போலவே ஜீவன் இருக்கிறது. ரமேஷ் விநாயகத்தின் இசையும், பாடல்களும் ரசிக்கும்படி, சுருதிலயம் தப்பாது இருக்கிறது.


ஜீவனின் எழுத்து, இயக்கத்தில் களவு செய்பவனுக்கும் காதல் கொள்ளும் கனத்த இதயம் உண்டு எனும் கருத்தை சொல்லியிருக்கும் " மொசக்குட்டி - படப்பெட்டி - பணப்பெட்டி - வரும் கெட்டி!" .மொசக்குட்டி - குமுதம் விமர்சனம்


"மைனா, "சாட்டை எடுத்தவர்கள் அந்தப் படங்களை நினைவுப்படுத்துவது போல் எடுத்திருக்கும் படம் இது.

திருடனான ஹீரோ வீரா, தன்னுடைய திருட்டுப் பொருள்களை வாங்கும் மனிதர் வீட்டுப் பெண்ணையே களவாட முயல அந்தக் காதல் என்ன ஆச்சு என்பதுதான் "மொசக்குட்டி.

"மைனா நாயகன் போலவே வீராவும் ஒரு மாத தாடி, மூன்று மாத தலை முடி என்று இருக்கிறார். பேட் மேன் ஸ்டைலில் பறந்து திருடுவது வேடிக்கை. ஆனால் அதையே க்ளைமாக்ஸில் வைத்திருப்பது ரொம்ப ஓவர்.

"சாட்டை மஹிமாதான் ஹீரோயின். கொஞ்சம் பாந்தம், கொஞ்சம் பாவம்.

வீராவிடம் ஆயிரக்கணக்கில் காண்டம் கொண்டு வரச் சொல்வதும், தாலி வாங்கி வரச் சொல்வதும் கலகலப்பு. (இயக்கம் ஜீவன்).

செண்ட்ராயனும் பாஸ்கரும் எப்போதாவது கிச் கிச்.

பசுபதியும், ஜோமல்லூரியும் பார்வையாலேயே மிரட்டுகிறார்கள்.

"மைனா கேமராமேன் சுகுமார், இதிலும் காடு, மலை என்று சுற்றிக்காட்டி கண்ணுக்கு ஏ.சி. மாட்டுகிறார்.

கேரளாவுக்கு நாயகியை அழைத்துச் செல்வதெல்லாம் ஓகேதான். ஆனால் அங்கே ஏதோ பெரிதாக நடக்கும் என்று பெரிதாக நடக்கும் என்று எதிர்பார்த்தால் அல்பையாக இருக்கிறது.


மொசக்குட்டி - பாய்ச்சல் கம்மி
குமுதம் ரேட்டிங் - ஓகேவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in