Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தூம்-3 (இந்தி)

தூம்-3 (இந்தி),Dhoom-3 (Hindi)
 • தூம்-3 (இந்தி)
 • நடிகர்: அமீர்கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா
 • நடிகை:கத்ரீனா கைப்
 • இயக்குனர்: விஜய் கிருஷ்ண ஆச்சார்யா
26 டிச, 2013 - 18:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தூம்-3 (இந்தி)

தினமலர் விமர்சனம்லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3

1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால். 2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.

வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார். பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!

150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.

மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'

ரசிகன் குரல் - கல்யாணம்னு பண்ணினா கத்ரீனா மாதிரி ஒரு தேவதையைத்தான் கல்யாணம் பண்ணனும்.வாசகர் கருத்து (20)

vignesh - karur  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 20:06 Report Abuse
vignesh அணைத்து பத்தி்ரிக்கைகளும் வரி மாறாமல் காப்பி அடித்து இருக்கின்றன
Rate this:
velloraan - vellore  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 00:04 Report Abuse
velloraan படத்தி்ல் முக்கியமாக கதாநாயகரோ அல்லது மற்ற நடிகர்களோ மது குடிப்பது போன்ற காட்சிகள் இல்லை(என் பார்வையில்)இதற்காகவே படத்தி்ன் இயக்குனரை பாராட்டலாம் நம் தமிழ்பட இயக்குனர்களும் இதை பின்பற்றலாம்
Rate this:
velloraan - vellore  ( Posted via: Dinamalar Android App )
29 டிச, 2013 - 23:46 Report Abuse
velloraan இந்த படத்தி்ல் அமிர்கானுக்கு வங்கியை கொள்ளையடிப்பது முக்கியமல்ல எப்படியாவது அந்த வங்கியின் பெயரை கெடுத்து தி்வாலாக்கி தன் தந்தையின் மரணத்தி்ற்காக பழி வாங்கவேகொள்ளையடிக்கிறார் ஆகவே தி்ருடும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடக்காமல் இருந்தி்ருக்கலாம் அமிர்கானின் நடிப்பு பிரமாதம் படம் நன்றாகவே உள்ளது
Rate this:
Siva Sakthi - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28 டிச, 2013 - 16:46 Report Abuse
Siva Sakthi எனக்கும் ஒன்றும் புரியவே ilia அது எப்படி வங்கியை கொள்ளை அடிபதுதான் படத்தின் முக்கியமான விஷயம் ஆனால் எப்படி கொள்ளை அடிகிரர்கள் என்றே சுத்தமா காண்பிக்கவே இல்லை அமிர்க்ஹன் படத்தில் நடித்ததை விட பைக் தான் அதிகமாக ஒட்டி இருக்கிறார் மத்தபடி ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார் ஒரு நல்ல நடிகரை நடிக்க வைக்காமல் வினடிது இருகிறார்கள் படம் பெரிதாக ஒன்றும் இல்லை இது மாதிரி ஒரு தமிழ் படம் வந்து இருந்திருந்தால் 1 வாரம் ஓடுவதே அதிகம் அதை விட ரசிகர்களாகிய நம்முடைய பார்வை ஏன் பரபத்ச்சமாக உள்ளது என்றே எனக்கு தெரிய வில்லை படைத்திருக்கு தூம் 3 டைட்டில் விட ரசே 3 என பெயர் வைத்திருக்கலாம்
Rate this:
yuva - bhavani  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 12:08 Report Abuse
yuva its not worth to watch.... its copy of prestige english movie... no intrresting scenes and no logic... very bore movie.. I didn't expect this from amir... waste of money. ..
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
29 டிச, 2013 - 11:22Report Abuse
ரெட்டைவால் ரெங்குடுமிக்க நன்றி Yuva .. மூனு நாலா இந்த படத்தோட ஒரிஜினல் கதை எந்த படம்ன்னு மண்டைய பிச்சுகிட்டு இருந்தேன்.. "PRESTIGE" ன்னு போட்டு குடுத்ததுக்கு நன்றி... 'Double Action'& 'மகிசியன்' கான்செப்ட்டை திருடியவர்கள் அந்த படத்தில் இருந்த விறுவிறுப்பு & சுவாரஸ்யத்தை எடுக்காதது ஏணோ?...
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in