Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ராம் லீலா

ராம் லீலா,Ram leela
 • ராம் லீலா
 • ரன்வீர் சிங்
 • தீபிகா படுகோனே
 • இயக்குனர்: சஞ்சய் லீலா பன்சாலி
16 நவ, 2013 - 15:27 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராம் லீலா

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comவில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட் கதைல ஆங்காங்கே ராமாயணக்கதையை மிக்ஸ் செஞ்சா ஈசியா ராம் லீலா கதை ரெடி.

குஜராத்ல ஏதோ ஒரு கிராமத்துல கதை நடக்குது. அங்கே 500 வருசமா விரோதம் உள்ள 2 தாதா க்ரூப். அங்கே அடிக்கடி துப்பாக்கிச்சண்டை நடக்கும். தூள் சொர்ணாக்கா மாதிரி, அப்பு பிரகாஷ்ராஜ் மாதிரி கேரக்டர் உள்ள லேடி தாதா வோட பொண்ணு தான் ஹீரோயின். அவருக்கு லண்டன் மாப்பிளையை நிச்சயம் பண்ண மேரேஜ்க்கு முன்னமே வீட்டோட மாப்ளையா ஒரு அப்பாவி ஆள் வர்றாரு. ஆனா பொண்ணுங்க எப்பவும் நல்லவனை, அப்பாவியை காதலிக்க மாட்டாங்க எனும் ஆகமத(சினிமா) விதியின்படி ஹீரோயினுக்கு அவரைப்பிடிக்கலை. ஒரு ஹோலிப்பண்டிகை நாள்ல ஹீரோவை ஹீரோயின் மீட் பண்றாரு. கண்டதும் காதல்.

சந்திச்ச முதல் டைமே ஹீரோயின் ஹீரோவுக்கு பச்சக்னு லிப் கிஸ் அடிக்கறார். பெண்களுக்கும் சம உரிமை வேணும் இல்லையா? அதனால. ஹீரோயின் வீட்டுக்கே ஹீரோ போறார். மெயின் மேட்டரைத்தவிர மத்ததெல்லாம் நடக்குது 2வது சந்திப்பிலேயே. இவங்க காதல் என்னாச்சு? சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ்.

சும்மா சொல்லக்கூடாது ஒளிப்பதிவு தான் படத்தின் முதல் ஹீரோ. சும்மா பிரிச்சு மேஞ்சிட்டார். ஒவ்வொரு சீனும் கலர் ஃபுல் கலக்கல் தான். ஆடை அலங்கார நிபுணர்க்கு அவார்ட் நிச்சயம். பின்னே ஹீரோயினுக்கு எப்படி ஜாக்கெட் தைக்கனும்கறதுல பி.ஹெச்.டி பண்ணின மாதிரி லோ கட் ஜாக்கெட்ட்டா படம் பூரா போட்டு விட்டிருக்காரே?

ஹீரோ ரன்வீர் ஓப்பனிங்க் சீன்ல இருந்தே தன்னோட இன்னிங்க்ஸை ஆரம்பிச்சுடறார். டான்ஸ் காட்சிகளில் விஜய், ரஜினி என கலந்து கட்டி கலக்கறார். சிக்ஸ் பேக் உடம்பு இருக்கு பாரு பாருன்னு கமல் ஹாசன் கணக்கா அடிக்கடி சட்டையைக்கழட்டிடறாரு. பொண்ணுங்க எல்லாம் விசில் அடிக்குது. கலிகாலம்டா சாமி.

ஹீரோயின் தீபிகா படுகோனே. படம் பார்ப்பவர்களை ஒரு சீன் கூட தூங்க விடாமல், இமை கொட்டாமல் எழுச்சியோடு படம் பார்க்க வைக்கும் சாமர்த்தியம், வசீகரம், அழகு, திறமை எல்லாம் இருக்கு. தன் முக்கால் வாசித்திறமையை இந்த ஒரே படத்துல காட்டிட்டார். முழுத்திறமையையும் காட்டி இருப்பார், அவர் எல்லாத்துக்கும் ரெடி தான் ஆனா இந்த வீணாப்போன சென்சார் ஆபீசர் இருப்பதால் அடக்கி வாசிச்சிருப்பார் போல. அழகைக்காண கண் கோடி வேணும். நஸ்ரியா, லட்சுமிமேனன்கள் எல்லாம் இவர் கிட்டே 2 ஜென்மம் ட்யூசன் படிச்சாலும் ஜஸ்ட் பாஸ் மார்க் கூட வாங்க மாட்டாங்க.

ஹீரோயின் அம்மா ரோல் வில்லி ரோல் மாதிரி, மும்பைக்கு வேணா புதுசா இருக்கலாம், ஆனா நமக்கு பழசு தான். இதை விடப்பெரிய வில்லிகளை எல்லாம் பார்த்தாச்சு . இருந்தாலும் அவர் நடிப்பு அதகளம் .

சி.பி.கமெண்ட் - தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே, ஹம் ஆப் கே ஹெயின் கோன் அளவுக்கு எல்லாம் இல்லைன்னாலும் படம் போர் அடிக்காம கலர்ஃபுல்லா போகுது. டைம்பாஸ் ஆகும் லவ்வர்ஸ் பார்க்கலாம். பேமிலியோட பார்க்க முடியாது. காட்சி ரீதியாவும், வசனத்திலும் பல இடங்களில் அக்மார்க் ஏ. இதுக்கு எப்படி சென்சார்ல ஏ தர்லைனு தெரியலை.

ராம் லீலா - ரோமியோ ஜூலியட் உல்டா லவ் ஸ்டோரி. கலர்புல் மேக்கிங், பாடல்கள், ஒளிப்பதிவு. கமர்ஷியல் ஹிட் பிலிம்.வாசகர் கருத்து (3)

Dummy - Chennai,இந்தியா
04 டிச, 2013 - 20:55 Report Abuse
Dummy ஹீரோ ப்ளூ பிலிம் விற்கும் CD கடை வைத்து இருக்கின்றார் ...... நல்ல family ?
Rate this:
p.selvakumar - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2013 - 16:13 Report Abuse
p.selvakumar படம் சூப்பர்
Rate this:
Vikki Venkat - Hanoi,வியட்னாம்
18 நவ, 2013 - 07:34 Report Abuse
Vikki Venkat வாழ்த்துக்கள் சிபி அவர்களே...(விக்கி)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in