Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜமீன்

ஜமீன்,Jameen
06 ஆக, 2013 - 20:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜமீன்

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஒண்ணே முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா இருக்கும் போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ ஓவரா அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும் , வாழ்க்கைல அலப்பறை பண்ற டார்ச்சரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை அப்டிங்கற பழமொழிக்கு ஏற்ப அவருக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு . அதாவது அவரோட தாத்தா உயில் ல ஒரு கொக்கி வெச்சுட்டு போயிடறார். அதாகப்பட்டது சில கண்டிஷன்ஸெல்லாம் போடறார் . ரொம்ப ரொம்ப கஷ்டமான அந்த கண்டிஷன் ஸ் என்னான்னா

1. ஹீரோ காலேஜ்ல டிகிரி முடிக்கனும் ( டிகிரியையே முடிச்சுக்கட்டக்கூடாது , படிச்சு பாஸ் ஆகனும் )
2. காலேஜ் சேர்மென் எலக்‌ஷன்ல ஜெயிச்சு பதவில நிலைக்கனும்
இந்த கேவலமான கண்டிஷன்ஸை ஹீரோ எப்படி எதிர் கொள்ளறார் என்பதே கோமாளித்தனமான திரைக்கதை

ஹீரோ நான் ஈ பட ஹீரோவான நானி . அந்தப்படத்துல பிரமாதமா நடிச்சவர் இந்தப்படத்துல சொதப்ப 2 காரணங்கள்
1. திரைக்கதை புளிச்சுப்போன மாவு
2. இளைய தளபதி விஜய் , புரட்சித்தளபதி விஷால் மாதிரி எல்லாம் இமிடேட் பண்ணி நடிச்சு சின்னத்தளபதி பரத் ரேஞ்சுக்கு கேவலமா இவர் இறங்கிப்போனது ( பரத்துக்கு எங்காவது எந்த மூலைலயாவது ரசிகர்கள் ரசிகைகள் இருந்தால் மன்னிக்க )
டான்ஸ் மூவ்மெண்ட்ல விஜய் , காமெடி காட்சிகள்ல விஷால் இதுதான் நானியோட டார்கெட் . ஆனா அதுல என்ன காமெடின்னா டான்சில்கூட ஓகே, காமெடி சீன்கள்ல படு கேவலமான பாடி லேங்குவேஜ் , முடியல

ஹீரோயின் 2 பேரு. ஆந்திராவில எப்பவும் 2 ஹீரோயின்ஸ் தான் . ஒரு ஹீரோயின் பிந்து மாதவி . மெயின் ஹீரோயின் ஹரி ப்ரியா . பாப்பா கையில் 10 லட்சம் ரூபா குடுத்து சிரி அப்டினு சொன்னாக்கூட உம்முனு இருக்கற உப்புமா ரகம் போல . எப்போ பாரு உம்முன்னு இருக்கு.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு படத்தைத்தான் நகாசு வேலை பண்ணி படம் எடுத்து இருக்கோம்கறதை மூச்சு விடாதது
2. படத்துல இருக்கோ இல்லையோ ஏகப்பட்ட சீன்கள் இருப்பது மாதிரி 2 ஹீரோயின்களை வெச்சு கிளாமர் ஸ்டில்ஸோட போஸ்டர் ரெடி பண்ணினது

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. என்ன தான் ஜமீன் தாரா இருந்தாலும் நைட் படுக்கும்போது நைட் டிரஸோ , லுங்கி , வேட்டி, கைலி யோதானே கட்டிட்டு படுப்பாங்க . நீட்டா பேண்ட் ,சர்ட் போட்டு டக் இன் பண்ணி டை கட்டி கோட் சூட் போட்டுட்டு ஷூ கூட கழட்டாம ஃபுல் மேக்கப்போட எந்த கேனயனாவது டெய்லி படுத்து தூங்குவானா? ஓப்பனிங்க் சீன்லயே இந்த சொதப்பல்
2. ஹீரோ ஏதோ கோபத்துல ஒருஆளை கன்னத்துல வெட்டுக்காயம் வர்ற அளவு தாக்கிடறார். ஃபாரீன்ல போய் சிகிச்சை பண்ணாலே அந்த காயம் மறைய 6 மாசம் ஆகும். ஆனா அடுத்த நாளே மழு மழுனு அவர் கன்னம் இருக்கு , என்னய்யா கண்ட்டிநியூட்டி பார்த்து கிழிச்சீங்க . இந்த லட்சணத்துல படத்துக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் 24 பேராம்
3. ஒரு காட்சில ஹீரோ, வெங்கடாசலபதி ஒயின்ஷாப்ல மீட் பண்ணலாம்கறார். ஆனா காட்சில பார்வதி ஒயின் ஷாப் போர்டு இருக்கு
4. ஹீரோ கைல காசு இல்லை . ஏ டி எம் கார்டு டி ஆக்டிவேட்டட் . ஜமீன் பணம் கிடையாது . மாசம் ரூ 2,500 மட்டுமே கல்விச் செலவுக்கு தரப்படுது. அடிக்கடி ஹீரோ பணமே இல்லைனு புலம்பறார் . ஆனா ஒருசீன்ல 5லட்சம் செலவு பண்ணி டான்ஸ் பார்ட்டி வைக்கறார் .
5. சிக்கிமுக்கி கல்பாட்டு மியூசிக் அச்சுஅசல் அழகியதமிழ்மகன் பாட்டான “ மதுரைக்குப்போகாதடி” பாட்டு இசை உல்டா

மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான் பேசனும்னு நினைக்கும்போதுதான்பேச முடியும் . நீ பேசநினைக்கும்போது முடியாது. ஏன்னா நான் பாஸ்
2. நான் பீட்சா டைப், நீ தாம்பூலம் டைப், நமக்குள்ளே சிங்க் ஆகாது
3. எத்தனை சேவல் கூவுனாலும் , கூடுனாலும் முட்டை போடாத கோழி அது , ஹி ஹி
4. பொட்டு வைக்கக்கூட மறக்கற பொண்ணுங்க மருதாணி வைக்க ஆரம்பிச்சுட்டா காதலிக்கறா -னு அர்த்தம்
5. எக்சாம் ஹாலில் -
டேய், எனக்கு ஒரு பிட் கொடு
இதென்ன டீக்கடை பஜ்ஜியா? எடுத்துத்தர?
6. சிங்கம் காட்ல இருந்தாலும் , ஜூ வில் இருந்தாலும் வேட்டையாடித்தான் சாப்பிடும்
7. நம்பிராஜனைப்பார்த்தியா?
பக்கத்துல ஏதாவது ஒயின் ஷாப் இருக்கா பார்த்தியா?
8. அம்மா , தர்மம் பண்ணுங்கம்மா, ஆண் குழந்தையாப்பொறக்கும்
அட போப்பா , என் புருஷன் ஓடிப்போய் 7வருஷம் ஆகுது , இவன் வேற கடுப்பைக்கிளப்பிட்டு
9. நாங்க வாழ நினைச்ச எங்க வாழ்க்கையையும் சேர்த்து நீ வாழனும் ,இதுதான் எங்க ஆசை
10. வெற்றில என்ன இருக்கு? ஒரு முறை தோற்றுப்பார் . இந்த உலகமே உனக்கு புரிபட ஆரம்பிக்கும்
11. யோவ்,குளிக்கறியா?
இல்லை , சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுட்டு இருக்கேன் , ஆத்தங்கரைல வந்து என்ன கேள்வி இது ராஸ்கல் ?

சி பி கமெண்ட் - பத்து பைசாவுக்குக்கூட படம் தேறாது , டிவி ;ல போட்டாக்கூட யாரும் பார்க்கவேணாம்



வாசகர் கருத்து (1)

parasu - chennai,இந்தியா
09 ஆக, 2013 - 17:56 Report Abuse
parasu பாஸ் இது ஒரு டப்பிங் படம்...இந்த படம் தெலுங்குல வந்து 2 வருஷம் ஆச்சு, இது எதுமே தெரியாம விமர்சனம் பண்ணி இருக்கீங்க, நாணி விஜயையோ , விஷாலையோ immitate பண்ணல. ஏன்னா அவரு தெலுகு நடிகர்....அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இது ஒரு கொரியன் படம் ரீமேக் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in