என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர்தான் அனுராக் காஷ்யப். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.. தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்கலுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட அனுராக் காஷ்யப் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டபோது, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செயப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.