‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். சாச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிருத்விராஜும், பிஜுமேனனும் நடித்திருந்தார்கள். ஒரு போலீஸ் சப் இன்ஸ் பெக்டருக்கும், ஒரு இளம் ராணுவ வீரனுக்குமான ஈகோ மோதல் தான் கதை. 5 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 52 கோடி லாபம் ஈட்டியது.
தற்போது இந்தப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் பிறமொழி ரீமேக் உரிமத்தை போனி கபூர் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் இதன் ரீமேக் பணிகள் தொடங்கி விட்டது. இதில் ராணா, பவன் கல்யாண் நடிக்கிறார்கள்.
ஹிந்தி ரீமேக் பணிகளும் தொடங்கி உள்ளது. இதில் அபிஷேக் பச்சனும், ஜான் ஆபிரஹாமும் நடிக்கிறார்கள். மிஷன் மங்கல் படத்தை இயக்கிய ஜெகன் ஷக்தி இயக்குகிறார். ஜூலை மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹிந்திக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது.