விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை |

பிரவுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த தபாங் 3 கடைசியாக வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்திருக்கும் படம் ராதே. இந்த படத்தில் தமிழ் நடிகர் பரத், நடிகை மேகா ஆகாஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் திஷா படானி, ரன்தீப் ஹூடா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வெடரன் என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியீடு தள்ளிபோடப்பட்டுக் கொண்டே வந்தது.
தமிழ் நாட்டில மாஸ்டர் படம் மக்களை தியேட்டருக்கு கொண்டு வந்தது போன்று வட நாட்டில் இந்த படத்தைத்தான் தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் எப்போது வெளிவந்தாலும் தியேட்டரில் தான் வெளிவரும் என்ற சல்மான்கான் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற மே 13ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை சல்மான்கானும் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.