‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழில் நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படம், ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார், சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா நடித்த கோகிலா கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் அல்லல்படும் இந்த நேரத்தில் படப்பிடிப்பா என்று கூறி படப்பிடிப்பு தளத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் வலியை கண்டுகொள்ளாத பாலிவுட் நட்சதிரங்களுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் இயக்குனர் சென்குப்தா விவசாயிகளிடம் பேசினார். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள். எங்கள் ஆதரவை டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். மற்ற பாலிவுட் நட்சத்திரங்களிடம் உங்களுக்கு ஆதரவு திரட்டுவோம். என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜான்வி கபூர் தனது டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவான பதிவை வெளியிட்டார். அதில் "விவசாயம் தான் நம் நாட்டின் இதயம். நம் தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நன்மை தரும் முடிவுகள் ஏற்படும் என்று நம்புகிறேன்". என்று தெரிவித்துள்ளார்.