நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த சில வருடங்களாகவே நடிகை ஜோதிகா மும்பைவாசியாக மாறிவிட்டார். அதுமட்டுமல்ல மீண்டும் ஹிந்தியில் தனக்கான நல்ல கதாபாத்திரங்களாகவும், கதை அம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் டைரக்ஷனில் உருவாகும் சிஸ்டம் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ஜோதிகா.
இவருடன் இணைந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஒரு அரசு வக்கீலாகவும், ஜோதிகா அதே கோர்ட்டில் வேலை செய்யும் ஒரு ஸ்டெனோகிராபர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் தவிர இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் அசுதோஷ் கோவ்ரிகர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த சிஸ்டம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.