Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம்

14 மார், 2026 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Anil-Kapoor-explains-why-he-didnt-act-in-Dhurandhar-2,-saying-it-was-a-loss-for-him
Advertisement

கடந்த டிசம்பர் மாதம் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துரந்தர். 1300 கோடிகளுக்கு மேல் வசூலித்த இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகம் வெளியான நான்கே மாதங்களில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் 2 வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அழைத்ததாகவும் ஆனால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகர் அனில் கபூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் ஆதித்யா தர் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கும் அது பிடித்திருந்தது. அதேசமயம் அவர் கேட்ட தேதிகளை நான் ஏற்கனவே வேறு ஒரு படத்திற்கு ஒதுக்கி இருந்தேன். சினிமாவில் நான் நானாக இவ்வளவு நாள் நிலைத்து நிற்பதற்கு காரணம் வெறும் திறமையால் மட்டும் அல்ல. தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால் தான். அதனால் தான் ஆதித்யாவிடம் எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது, ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலை இருக்கிறது. எனக்கு இது நட்டம் தான். ஆனாலும் ஓகே” என்று கூறினாராம் அனில் கபூர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதுராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ... முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap