நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது 83 வயதாகும் நிலையில் கூட தொடர்ந்து சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டு தன்னை எப்போதும் பிசியாகவே வைத்துக் கொள்கிறார். அதேபோல தனது நட்பு வட்டாரங்களுக்கும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அமிதாப் பச்சன். இந்த நிலையில் அவருடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் காலமானார். அவரது மரணம் அமிதாப் பச்சனை ரொம்பவே பாதித்துள்ளது.
இது குறித்து அவர் தனது பிளாக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் அன்பான இன்னொரு நண்பரை இழந்தேன். அளவற்ற பாசமும் நகைச்சுவையும் நிறைந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் வழியை கண்டுபிடிக்கும் திறமைசாலி. அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை.. ஆனால் அவர் போய்விட்டார் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. ஒவ்வொருவராக அனைவரும் வெளியேறுகிறார்கள்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.