வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் இந்திய அரசின் சார்பில் தேர்வாகியுள்ளது.
இதில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் பற்றிய கதை.
இந்நிலையில், 'ஹோம்பவுண்ட்' படத்தின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஓடிடியில் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் இந்தியா மீது எழுத்தாளர் பூஜா சாங்கோய்வாலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், "நான் எழுதிய 'ஹோம் பவுண்ட்' என்ற நாவலின் கதையை தழுவி படத்தை எடுத்துள்ளனர். தலைப்பை தவறாக பயன்படுத்தியது மட்டுமின்றி, படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளது. காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு ஆகியவற்றையும் காப்பி அடித்துள்ளனர். எனவே படத்தை தடை செய்து, எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




