சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன். அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை நடித்தவர், கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்கள் இரண்டு பேருக்கு இடையே 20 வயது வித்தியாசம் என்பதால் இது விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தப் படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் நிகர வசூலாக 130 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு, இதுவரை ரன்வீர் சிங் நடித்த படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது.
குறிப்பாக, ஹிந்தியில் சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் அடுத்தடுத்து அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிய தொடங்கி இருக்கிறதாம். அதனால் அரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.