இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் நாளை வெளியாக இருக்கும் படம் 'ஓஜி'. இந்த படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மூன்று நாட்களை ஒதுக்கி இருந்தார் பவன் கல்யாண். அதன்படி சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவன் கல்யாண் அதன்பிறகு பெய்த கன மழையில் எதிர்பாராமல் நனைந்ததால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதை தொடர்ந்து மீதி இரண்டு நாட்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளையும் பவன் கல்யாண் குழுவினர் ரத்து செய்துள்ளனர். அது மட்டுமின்றி ஏற்கனவே அந்த முதல் நாள் நிகழ்ச்சியிலே ஓஜி படத்திற்கான மிக அதிகமான பப்ளிசிட்டி கிடைத்து விட்டதால், மீண்டும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் குழுவும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.