Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன்

28 மார், 2026 - 01:28 IST
எழுத்தின் அளவு:
Dhurandhar-Scene-Madhavan-Apologizes
Advertisement

சமீபத்தில் வெளிவந்த ஹிந்தி படமான 'துரந்தர் 2ம் பாகம்' முதல் வாரத்திலேயே ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்து வந்தாலும் மற்றொருபுரம் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரா அமைப்பின் தலைமை அதிகாரியான மாதவன் சிகரெட் புகைத்தபடியே சீக்கிய மதகுரு கோவிந்த் சிங் எழுதிய தசம் கிரந்தத்தின் வரிகளை சொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.

தங்கள் மத குருவின் புனித வாக்கியங்களை எப்படி சிகரெட் புகைத்தபடி சொல்லலாம் என்று இதற்கு சீக்கிய மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவரும், மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் குழுவின் தலைவருமான குர்ஜோத் சிங் கீர், மும்பையின் முலுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மாதவன் நாங்கள் செய்யாத ஒன்றிற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம் என்றாலும் மன்னிப்பு கேட்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: ''தசம் கிரந்தத்தின் வரிகள் எனக்குப் புனிதமானவை மற்றும் தூய்மையானவை. அந்த காட்சியில் நான் சிகரெட்டை முறையாக அணைத்துவிட்டேன், என் வாயிலிருந்து புகை வரவில்லை. மேலும் அந்தக் காட்சி முழுவதும் சிகரெட்டின் எந்தத் தடயமும் இல்லை.

நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ யாரையும் காயப்படுத்த மாட்டோம். நாங்கள் எப்போதும் முழு சீக்கிய சமூகத்திற்கு துணை நிற்போம். இந்த காட்சிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் கூறப்படும் குற்றச்சாட்டை நாங்கள் நிச்சயமாகச் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாதவன் பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் ... 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Kamaraj TA - PALANI,இந்தியா
02 ஏப், 2026 - 12:04 Report Abuse
Kamaraj TA இதையெல்லாம் சரியாகக் கேட்பவருக்கு தவறுதான் மன்னிப்பு என்று கேட்பவர்கள், ஒருத்தர் சனாதனம் டெங்கு போல என்று கூறியதற்கு எந்த ஒரு நடிகரும், அல்லது திரைப்படம் சார்ந்த எந்த ஒருவரும் எந்தவிதமான ரியாக்சனும் செய்யவில்லை. எல்லாம் பணம் படுத்தும் பாடு........ நடிகர்கள் என்றைக்கும் நடிகர்களே......... அவரை விட மோசமான பிறவிகள் அரசியல்வாதிகள்............. நான் கூறுவது எல்லா அரசியல்வாதிகளையும்தான்.............
Rate this:
SULLAN - chennai,இந்தியா
07 ஏப், 2026 - 10:04Report Abuse
SULLANஉண்மையில் இஸ்லாமியர்களிடம்தான் மன்னிப்பு கோர வேண்டும் இந்த படக்குழுவினர் கேவலம் பணத்திற்காக எந்த அளவிற்கு கேவலமாக பிரச்சார வன்முறைகளை நியாயப்படுத்துகிறார்கள் இவையெல்லாம் இந்த தேசத்தின் கருப்பு பக்கங்கள் ஆகும் கேடுகால சம்பவங்கள். இவர்களுக்கு மனசாட்சியே அறிவோ சுத்தமாக இல்லை தேசபத்தி போர்வையில் ஆளுங்கட்சியினரின் அருளாசிகளையும் கள்ள பணத்தையும் பெற சக இஸ்லாமிய மக்களை கேவலமாக நயவஞ்சகமாக சித்தரிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap