ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
பாலிவுட் திரையுலகில், சனம் தேரி கசம் என்கிற டைட்டில் ரொம்பவே பிரபலமானது. எண்பதுகளில் கமல் இந்தியிலும் நடித்து வந்த சமயத்தில் அங்கே இதே டைட்டிலில் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு சயீப் அலிகான், பூஜா பட் நடிப்பில் இதே டைட்டில் இந்த படம் 2009ல் வெளியானது. தொடர்ந்து கடந்த 2016ல் ஹர்ஷவர்தன் ரானே நடிப்பில் மீண்டும் சனம் தேரி கசம் என்கிற பெயரிலேயே இந்த படம் உருவானது. புதிய கதை அம்சத்துடன் ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.
இந்த படம் வெளியான சமயத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதே சமயம் சமீபத்தில் இந்த படம் எந்தவித புரமோசனும் இன்றி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆச்சரியமாக இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. குறிப்பாக முன்பு வெளியான போது கிட்டத்தட்ட எட்டு கோடி மட்டுமே வசூல் செய்த இந்த படம் தற்போது ரீ ரிலீஸில் முதல் ஒரு வாரத்தில் மட்டும் 26 கோடி வசூல் செய்துள்ளதாம். நடிகர் அமிதாப்பச்சன் இந்த படம் குறித்தும் ஹர்ஷவர்தன் ரானேவின் நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த வரவேற்பை தொடர்ந்து படத்தின் இயக்குனர்கள் ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு ஆகியோரிடம் இதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் சல்மான்கானை வைத்து இயக்குவீர்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப, நீங்கள் சொல்வது நடக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனாலும் சல்மான் தான் அந்த முடிவை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் இவர்களது கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் தீபக் முகத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, “இந்த சனம் கேரி கசம் என்கிற படம் எனக்கு சொந்தமானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான். அதனால் இதனுடைய இரண்டாம் பாகத்தை அது சீக்குவல் அல்லது பிரீக்குவல் அல்லது ரீமேக் எதுவாக இருந்தாலும் முடிவெடுக்கும் உரிமை எனக்குத் தான் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2024லேயே இதன் இரண்டாம் பாகத்தில் ஹர்சவர்தன் ரானேவே நடிப்பார் என நான் அறிவித்திருந்தேன். ஆனால் இயக்குனர்கள் இப்படி கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் என்னிடம் இது பற்றி இதுவரை கலந்து கொள்ளவில்லை. என்னை சந்திக்கவும் இல்லை. அதேபோல இந்த இரண்டாம் பாகத்திற்கான இயக்குனரையும் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.