'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
ஹிந்தியில் விக்கி கவுசலுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சாவா. சத்திரபதி சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது கால் எலும்பு முறிந்ததால் சிகிச்சையில் இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்று கலந்து கொண்டார்.
இப்படியான நிலையில் தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படத்துக்கு குறைவான முன்பதிவே இருந்துவந்த நிலையில் தற்போது டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென அதிகரித்து பெரிய அளவில் புக்கிங் நடைபெற்று வருகின்றன.